2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று நைஜீரியாவின் கடற்பகுதியில் திடீரென வெடித்து சிதறியதில் வானை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது.
நைஜீரியன் கடற்பகுதியில் 10 ஊழியர்கள் வரை சிக்கியிருந்த 2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் வானை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கப்பலிற்கு சொந்தமான நிறுவனம் விபத்தை உறுதிசெய்துள்ளது. மேலும் விபத்துக்குள்ளான கப்பலில் நாளொன்றுக்கு 22,000 பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.