Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்…. காரணம் என்ன தெரியுமா…?

நடுரோட்டில் இரண்டு மாணவிகள் சண்டையிட்டுக் கொள்ளும்‌ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் சில பேர் பள்ளியிலிருந்து வெளியே வரும் போது கடுமையான வாக்குவாதம் செய்து கொண்டே வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார்.

கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு அடித்துக் கொண்டுள்ளனர். இதன்பின் இரும்பு கதவுகளில் தலைக்கொண்டு மோத செய்தும் சராமரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்தனர். இதில் சிலர் மாணவர்களை தடுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் மாணவிகள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஒரு சில பேர்  சண்டையை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் செல்போனிலும் படம் பிடிக்க தொடங்கினர். ஆனால் மாணவிகளோ  தங்களை வீடியோ எடுப்பதை கவனிக்காமல் மாறாக தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில்  ஒருவரை ஒருவர் தாக்குவதிலேயே கவனமாக இருந்துள்ளனர். மாணவிகளின் இந்த குடுமிப்பிடி சண்டை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரம் கழித்து பொதுமக்களில் சிலர் அவர்களை விலக்கி விட்டிருக்கின்றனர்.

மாணவிகள் சண்டையிட்டுக் கொள்ளும் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதில்  ஒரு மாணவி தாக்கப்பட்டதில்  மூக்கு உடைந்துள்ளது. அவரை காதலன் என சொல்லப்படும் மாணவன் பாதுகாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் வெளியாகி இருக்கின்றது. இந்த மோதலுக்கான சரியான காரணம் என்ன என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

மேலும் இதுதொடர்பாக போலீசார் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சண்டையில் ஈடுபட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகிகள் தரப்பில் போலீசாரிடம் கூறப்பட்டது. காதலனுக்காக 2 மாணவிகள் மோதிக் கொண்டதாக தெரிகின்றது. சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிக்கு  தெரியாமல் அவரது ஆண் நண்பர் வெளியே அழைத்துச் சென்று இருக்கின்றார். இதுதான் இந்த சண்டைக்கான  காரணம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே இரண்டு மாணவிகளும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு மோதியுள்ளனர்.

இதுபற்றி கப்பன் பார்க் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக் கூடாது எனக் கூறினாலும் அதை பின்பற்றுவது இல்லை. இது மாணவ மாணவிகளின் கல்வி கற்கும் திறனை பாதிக்கும் எனவே மாணவ மாணவிகளிடையே ஒழுக்கத்தை போதிக்கவும், ஒழுங்கீனங்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |