சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவிகள் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் 2 பேர் நடுரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சண்டையிட்ட மாணவிகளை சக மாணவிகள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
ஆனால் அந்த மாணவிகள் தொடர்ந்து சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையிடும் காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.