பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசா பகுதியில் 144 வது பி.எஸ்.எப். பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் இன்று காலை சதேப்பா என்ற பி.எஸ்.எப் வீரர் முகாம்களிலுள்ள வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளார் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதல் நடத்திய சதேப்பாவும் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாரா? இல்லை மற்றவர்கள் அவரை தாக்கியதால் உயிரிழந்தார்?. மேலும் சதேப்பா துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பி.எஸ்.எப். பத்திரிகையாளர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் தொடர்பாக எல்லை படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.