பிரேசிலில் Luiz Henrique Coelho de Andrade (21) என்ற கால்பந்து வீரரை காவல்துறையினர் குற்றவாளி என்று தவறாக நினைத்து அவரை துரத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுடவே Luiz பயத்தில் அங்கிருந்த மாமிசம் தின்னும் பிரானா மீன்கள் இருக்கும் நதியில் குதித்துள்ளார். இதையடுத்து அவரது உடல் 11 மணி நேரம் கழித்து வெறும் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் Luiz-ன் தாய் Leila Coelho, “தனது மகனுக்கு நீந்த தெரியாது என்று தெரிந்தும் காவல்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டதோடு நதியை நோக்கி துரத்தியுள்ளனர்” என்று கூறியுள்ளார். ஆனால் உள்ளூர் ஊடகங்களோ, காவல்துறையினர் குற்றவாளிகளைத் துரத்தி கொண்டிருந்த போது Luiz அவர்களிடம் இருந்து விலக முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி நதியில் விழுந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளன.