Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!! நம்ம மதுரையில் இப்படி ஒரு சம்பவமா….? நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு பதிவு…!!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு நடிகர் சித்தார்த் தற்போது அரசியல் தொடர்பான கருத்துக்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது மதுரை விமான நிலையத்தில் தன்னுடைய பெற்றோர்களை CRPF அதிகாரிகள் தன்னுடைய பெற்றோர்களை துன்புறுத்தினார் என்று பதிவிட்டுள்ளார்.

அதோடு நாங்கள் வைத்திருந்த பைகளில் நாணயங்களை அகற்ற செய்ததோடு, ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்ததனர். நாங்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறியும் அவர்கள் இந்தியில் மட்டும் தான் பலமுறை பேசினார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு பணியாளர்கள் இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று கூறியதாக பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் சித்தார்த்தின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |