பிரபல நடிகையான டாப்ஸி ஆரோக்கிய விஷயங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் நான் அனைவருக்கும் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை எடுத்துக் கூறி வருகிறேன். இதை அனைவருக்கும் புரிய வைப்பதற்காக எனக்கு ஏற்பட்ட உடல்நிலை குறித்து பிரச்சினை குறித்து கூறுகிறேன். சிசிஓஎஸ் என்ற நோயின் பாதிப்போடு நான் போராடினேன். அதற்கான சிகிச்சை எடுத்த போது பல பக்க விளைவுகளை எதிர்கொண்டேன். யோகா மூலமாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன்.
சமீபத்தில் கூட வெரிகோஸ் வெயின்ஸ் எனும் நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதை சொல்வதற்கு நான் வெட்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நோய் என்பது அனைவருக்குமே சாதாரணமான விஷயம் இது. வெளியே செல்லும்போது அவமானம் என்று நினைத்தால் நம்முடைய ஆரோக்கியம் நம்முடைய கையை விட்டு போய்விடும். வயது வந்த மகள்களுக்கு பெற்றோர் இந்த விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் பெற்றோர் அல்லது கணவரிடம் தயக்கம் இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.