கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் கிராமத்தில் ஆறுமுகம் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் நேற்று ஆறுமுகத்தின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்தது.
அப்போது ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை நாய் கடித்து குதறியதில் 20 குட்டிகள் உட்பட 24 ஆடுகள் இறந்து விட்டதாக தெரிகின்றது. இதுகுறித்து ஆறுமுகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் நாய்களின் உரிமையாளர் மீது கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.