வட இந்தியாவில் சிற்றுண்டி வகையில் மோமோஸ் என்னும் உணவு மிகவும் பிரபலமாகும். கொழுக்கட்டை வடிவில் தயாரிக்கப்படும் இந்த உணவு அசைவ உணவாகவும் இருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் திரங்க சவுக் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு ஜிதேந்தர் மோட்டோ(40) என்ற நபர் சாலையோர சிற்றுண்டி உணவகத்தில் மோமோ சினவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 18 வயது இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக சிற்றுண்டி உணவகத்தில் மோமோஸ் சாப்பிட்டு கொண்டு இருந்த ஜிதேந்தர் மீது மோதியுள்ளார். இதில் ஜிதேந்தர் சற்று தடுமாறியதில் அவரது கையில் வைத்திருந்த மோமோஸ் கீழே விழுந்துள்ளது. இதனால் இவருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது வாக்குவாதம் முக்கிய நிலையில் இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜிதேந்தரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஜித்தேந்தர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை அடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஜிதேந்தரை கொலை செய்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
Categories