ஸ்பெயினிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக நுழைய முயன்ற படகு ஒன்று திடீரென நெரிசலுக்கு மத்தியில் சிக்கி கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 16 அகதிகளை அதிகாரிகள் தேடும் பணியில் இறங்கியுள்ளார்கள்.
கனேரித் தீவு கடலின் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக 58 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஸ்பெயினிற்குள் நுழைந்துள்ளது. அப்போது அந்த படகு திடீரென நெரிசலுக்கு மத்தியில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படகிலிருந்த 16 பேர் மாயமாகியுள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் 41 பேரை உயிருடன் மீட்டுள்ளார்கள். இருப்பினும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.