பொலிவியாவில் தனியார் விமானம் ஒன்று எஞ்சின் கோளாறால் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிவியாவில் சி 402 வகையை சேர்ந்த சிறிய விமானம் ஒன்றில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆகையினால் பறந்து கொண்டிருந்த அந்த இலகுரக தனியார் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த விமானம் என்ஜின் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சமவெளியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இருப்பினும் இந்த விமானத்தில் பயணம் செய்த 4 அதிகாரிகள் பயங்கர படுகாயங்களுடன் உயிருடன் தப்பியுள்ளார்கள்.