பள்ளி மாணவர் ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தள்ளாடிவரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழைப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1,000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி சீருடை அணிந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையில் தள்ளாடி விழுகின்றார். இதனையடுத்து அந்த மாணவரை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக அழைத்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.