பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு அருகே போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது திடீரென தற்கொலை படையை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு போலீசார் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காயம் அடைந்த பலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.