Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தி பாலியல் பலாத்காரம்…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகமங்களா பகுதியில் யூகப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம்  வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவிக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து வீடியோ கால் மூலமாக யூகப் அந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். மேலும் வீடியோ காலின் மூலம் யூகப் மாணவியின் சில அந்தரங்க காட்சிகளையும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் வீடியோவை வைத்துக்கொண்டு மாணவியை தனது ஆசைக்கு இணங்கும் மாறும் மறுத்தால் பதிவுகளை வெளியிடுவேன் எனவும் மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மாணவியை அவரது பாட்டி வீட்டில் விட்டு விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த யூகப் மாணவியின் பாட்டி வீட்டிற்கு வந்து அவரது பாட்டிக்கு  உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் மாணவியை பாலியல்  பலாத்காரம் செய்து விட்டு மதம் மாறினால் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனையடுத்து மாணவி வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் நடந்துவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த  மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |