பாதயாத்திரையாக சென்ற நபர் ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ பாண்டியன் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.