ரஷ்யாவால் துன்புறுத்தப்பட்ட உக்ரைன் இராணுவ வீரரின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கியது. இதில் உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளனர். இதனை வைத்து உக்ரைன் வீரர்கள் ரஷ்யா வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டு வருகிறார்கள். ரஷ்ய படையினரால் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் ரஷ்யா செய்த போர் குற்றங்களை உக்ரைன் ராணுவம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் மைக்கைலோ டியானோவ் என்ற அந்த இராணுவ வீரரின் பழைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக இருக்கும் அவரது புகைப்படம் காண்போரின் நெஞ்சை பதற வைத்துள்ளது. எதிரி நாட்டிடம் சிக்கும் போர்க் கைதிகளுக்கு இதுதான் நிலைமை என்பதை உணர்த்துவது போல இந்த புகைப்படம் உள்ளது.