பிரபல நாட்டில் புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கியாஷூ தீவை சக்தி வாய்ந்த நான்மடோல் புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கட்டிடங்களின் மேற்கூரை பலம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் நாட்டின் பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கியாஷூ தீவில் உள்ள பல்வேறு நகரங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. இந்தப் புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.