பிரபல நாட்டில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கார்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கவுதமாலா பகுதியில் அமைந்துள்ள சாலை மிகவும் பரபரப்பான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. இந்நிலையில் நேற்று கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்துள்ளது. அப்போது திடீரென சாலையில் 50 அடியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிவேகமாக வந்த கார்கள் பள்ளத்தில் விழுந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் காருக்குள் சிக்கி இருந்த 4 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் இருவர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.