அமெரிக்காவில் இயான் புயலால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் புளோரிடா மாகாணத்தை இயான் என்ற புயல் தாக்கியுள்ளது. இதுகுறித்து தேசிய புயல் மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புயலால் பலத்த காற்று வீசி மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளது.
இதனால் 22 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் பல நகரில் அவசர நிலை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புயலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.