தனது குழந்தைகளை கொலை செய்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியல் நகருக்கு வடக்கே லாவல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்ஜீத் அரோரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் மற்றும் மகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஜீத் அரோரா படுகொலை செய்தார். மேலும் தனது மனைவியும் அடித்து துன்புறுத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காயம் அடைந்த கமல்ஜீத் அரோராவை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உடல்நிலை சரியானது. மேலும் போலீசாரின் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது மூத்த மகள் நடந்த சம்பவம் பற்றி அண்டை வீட்டில் வசிக்கும் ஆன்னி சார்பென்டையர் என்பவரிடம் ஓடி சென்று தகவல் அளித்துள்ளார். அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.