பிரபல நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியாவில் உள்ள திமோவ்ஸ்கோய் நகரில் கடந்த 1980-ஆம் ஆண்டு 5 மாடிகளை கொண்ட ஒரு அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காயமடைந்த ஏராளமானோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.