பிரபல நாட்டில் விமானம் ஓடு பாதையில் மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நேற்று போர் விமானம் ஒன்று தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓடு பாதையில் விமானம் மோதியது. இதனையடுத்து விமானி உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.