வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி கர்நாடக மாநிலம் தனியார் ஹோட்டலில் வைத்து பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த பதறவைக்கும் விடியோ சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் சந்திரசேகர் குருஜி வரவேற்பையில் நடந்து வருகிறார். அப்போது அங்கு அவருக்காக காத்திருக்கும் இருவர் அவரை சந்திக்கின்றனர். அப்போது அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்த அவருடைய காலில் விழுந்து ஒருவர் ஆசீர்வாதம் வாங்குகிறார். இதனையடுத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து குருஜியை சரமாரியாக தாக்கினர்.
இதில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அங்கிருந்தவர்கள் சந்திரசேகர குருஜியை காப்பாற்ற முயன்றும் கொலைகாரர்கள் மிரட்டியதால் ஓடிவிடுகின்றனர். இது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சந்திரசேகர் குருஜியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.