கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர் நேற்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
சஞ்சய் ப்ரீபயர் ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். இந்த கேம் பாஸ்வேர்ட்டை அவரது நண்பர்கள் திருடியுள்ளனர். அதேபோல் தொடர்ந்து கேம் விளையாடி வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அதேபோல், தற்கொலைக்கு முன்பு சஞ்சய் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் யாரும் விளையாட்டுக்கு அடிமையாக வேண்டாம். ஒரு லட்சம் ரூபாய் தான் இழந்துவிட்டதாகவும் பதிவிட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.