கோவிங்டனில் உள்ள கிராவிட்டி டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தவர் கெவின் பெர்லிங் (Kevin Berling). இவர் கடந்த 2019-ல் நடந்த தேவையற்ற பிறந்தநாள் விழா தனக்கு கவலையையும் பீதியையும் கொடுத்ததாக தனது மனுவில் தெரிவித்துள்ளார். 29 வயதான அவர், 2018-ல் முதன்முதலில் அந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது, தனக்காக பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று அலுவலக மேலாளரை வற்புறுத்தி கேட்டுக்கொண்டதாக அவர் பைஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
பெர்லிங் கோரிக்கை விடுத்து இருந்தபோதிலும், 2019 ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஒரு ஆச்சரியமான முறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியது. ஆனால், இதனால் அந்நேரத்தில் அவர் பீதியடைந்துள்ளார். பின்னர் அவர் உடனடியாக அந்த கொண்டாட்டத்திலிருந்து வெளியேறி, சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டார் மற்றும் அவரது காரில் மதிய உணவையும் முடித்திருக்கிறார்.
அடுத்த நாள், நிறுவனத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பெர்லிங் மற்றவர்களால் விமர்சனம் செய்யப்பட்டார். அவர், சக ஊழியர்களின் மகிழ்ச்சியை சிதைத்தாகவும் மற்றும் ஒரு சிறுமி போல் நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
அந்த கூட்டத்திலும் இரண்டாவது முறையாக அவர் பீதியடைந்தார். பின்னர், பீதி அடைந்ததற்காக பெர்லிங் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு நிறுவனத்திடமிருந்து , முந்தைய வார நிகழ்வுகள் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கும்” ஒரு மின்னஞ்சல் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் விசாரணைக்குப் பிறகு, நடுவர் மன்றம் பெர்லிங்கிற்கு 450,000 வழங்கியுள்ளது. இதில் உணர்ச்சிபூர்வமாக பாதிக்கப்பட்டதற்கு 300,000 டாலரும், இழந்த ஊதியத்திற்கு ஈடாக 150,000 டாலரும் அடங்கும்.
ஆனால், நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்திருக்கிறது. Gravity Diagnostics இன் தலைமை இயக்க அதிகாரி ஜூலி பிரேசில் உள்ளூர் செய்தி நிறுவனமான Link NKY இடம், “பணியிட வன்முறைக் கொள்கையை” மீறியதாகக் கூறிய பெர்லிங்கை நிறுத்துவதற்கான அதன் முடிவில் நிறுவனம் நிற்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில், இந்த வழக்கில் தனது ஊழியர்களே உண்மையான பாதிக்கப்பட்டவர்கள் என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும் ஜூலி பிரேசில் கூறியுள்ளார்.