Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!…. புதையில் எடுக்க பூஜை செய்தவர் பலி…. நடந்தது என்ன?…. திடுக்கிட வைக்கும் பின்னணி…..!!!!

ஓசூரில் உள்ள கெலமங்கலம் அருகில் புதூர் கிராமத்தில் லக்ஷ்மணன்(50) என்பவர் வசித்து வருக்கிறார். இவர் விவசாயி. இவரது மனைவி உடல் நிலை குறைவால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் . இவருக்கு 2 மகன்களும், தனலட்சுமி(20) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை லட்சுமணன்  தனது வீட்டின் அருகில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையலுக்காக ஒரு குழி தோண்டினார். அந்த வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜைகள் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு பூஜை செய்த சிறிது நேரத்தில் தான் தோண்டிய குழியிலேயே மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். இவர் இறந்து கிடந்ததே பார்த்த அவரது குடும்பத்தினர் கெலமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமணன் உடலை கைப்பற்றி தேனி கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து லட்சுமணன் இறந்து கிடந்த இடத்தில் இரண்டு அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதில் பூஜை பொருள் மற்றும் கோழியின் ரத்தம் கொண்டு பூஜைகள் செய்ததற்கான அடையாளங்கள் உள்ளது. இதனால் அவர் புதையலுக்காக பூஜை செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லட்சுமணியின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால் அவர் எவ்வாறு இறந்தார் என்று குழப்பம் நீடிக்கிறது. அவரை யாரேனும் கொலை செய்தார்களா அல்லது அவர் தானாகவே உயிரிழந்தாரா என்று கெலமங்கலம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |