புழல் சிறை கைதி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்த கோட்டீஸ்வரன் (வயது 52) என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 9-ம் தேதி அன்று கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் கோட்டீஸ்வரன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் நேற்று கோட்டீஸ்வரன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.