தனது வீட்டு பூனையை காலால் எட்டி உதைத்த பிரபல கால்பந்து விளையாட்டு வீரருக்கு எதிராக இணையத்தில் எழுந்த கண்டனத்தையடுத்து அவர் அனைவரிடத்திலும் மன்னிப்பு கோரியுள்ளார்.
லண்டனிலுள்ள வீட்டில் வைத்து west Ham கால்பந்து அணியின் விளையாட்டு வீரரான kurt தனது பூனையை எட்டி உதைப்பது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மற்றொரு வீடியோவில் அந்த பூனையை அடிப்பது தொடர்புடைய காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இதனால் சமூகவலைதளத்தில் kurt க்கு எதிராக பலரும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளார்கள். இந்நிலையில் kurt “தனதுசெயலை எண்ணி மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும், அதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்பு கோருவதாகவும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பூனை தற்போது நலமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.