இன்று இளம் பெண் ஒருவர் பூனை கடித்ததால் மூன்றாவது ஊசி போடுவதற்காக அத்தாணி துறைமுகத்திற்கு அருகே உள்ள பொது சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊசி போடுவதற்காக காத்திருந்த அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதாவது அவரது இருக்கையின் கீழ் படுத்திருந்த நாய் அவரை கடித்ததாக அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். அதன் பின் மருத்துவமனை செவிலியர்களின் உதவியை நாடி முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டு அங்கு சிகிச்சை எடுத்து வருகின்றார். பூனை கடித்ததற்காக ஊசி போட சென்ற பெண்ணை நாய் கடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories