Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே பெற்ற பிள்ளைகள்… தாய் செய்த கொடூரம்… கண்ணீர் வடிக்கும் தந்தை..!!

பிரித்தானியாவில் பெற்ற குழந்தைகளை தாயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட அயர்லாந்தின் தலைநகரமான Belfast-ல் உள்ள வீடு ஒன்றிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டுக்குள் 2 வயது பெண் குழந்தை ஒன்றும், 8 வாரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதில் ஒரு குழந்தை மட்டும் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்தக் குழந்தைகளின் தாய் Raulca Tagani தான் அந்த குழந்தைகளை கத்தியால் குத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் Raulca-வை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே அந்த குழந்தைகளின் தந்தையான Liam இறந்த தனது மகனுடைய சவப்பெட்டியை கையில் சுமந்து கொண்டு செல்லும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. தோளில் சுமந்த தனது குழந்தையை சவப்பெட்டியில் ஏந்தி செல்லும் இந்த காட்சி பார்ப்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Categories

Tech |