பிரபல நிறுவனத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு பேஸ்புக் பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியது. இதனால் நிறுவனம் இது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 6 ஆயிரம் கோடி ரூபாயை அபராதமாக செலுத்துவதாக கூறியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் கூறியதாவது, “நாங்கள் தவறு செய்யவில்லை. ஆனாலும் பயனாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன் கருதி இந்த தொகையை வழங்குகிறோம்” என கூறியுள்ளது.