தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக பலரும் இப்போதிருந்தே டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதில் குறிப்பாக அதிகாலை காட்சியை பார்ப்பதற்கு தான் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். ஏனெனில் காலையில் படம் பார்த்துவிட்டு அதன் பின் வேலைக்கு செல்லலாம் என்பதால் அதிகாலை காட்சியில் டிக்கெட் முன்பதிவு அதிக அளவில் நடக்கிறது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கியின் புகழ்பெற்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் பலரும் புத்தகத்தை இப்போதிருந்தே படிக்க தொடங்கியுள்ளனர்.
ஏனெனில் நாவலில் வந்திருப்பது தான் படத்திலும் இடம்பெற்று இருக்கிறதா இல்லையெனில் இயக்குனர் தன்னுடைய ஸ்டைலில் ஏதாவது சேர்த்திருக்கிறாரா என்பதை விமர்சிப்பதற்காக ஒரு கூட்டம் தயாராகிவிட்டது. இதை வெளிப்படுத்தும் விதமாக தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் ஹைதராபாத்தில் நடிகை சுகாசினி பொன்னியின் செல்வன் படம் உங்க படம் என்று கூறியது ஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாவலை படித்து படத்தை விமர்சிப்பதற்கு தயாரானது தொடர்பான ஒரு வீடியோ பரவி வருவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னின் செல்வன் book readers preparing for reviews ryt now..🤗 pic.twitter.com/N1UAcppmf9
— black cat (@Cat__offi) September 27, 2022