மகாராஷ்டிராவை சேர்ந்த சர்வேஸ் என்ற மல்யுத்த வீரர் கடந்த சில தினங்களாக ராஷ்ட்ராகுல் குஸ்தி சங்கில் என்ற மல்யுத்த அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று கோலாப்பூர் மாவட்டத்தில் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் சர்வேஷ் வெற்றி பெற்றார். அதன் பிறகு மாலையில் மற்ற மல்யுத்த வீரர்களோடு சேர்ந்து அகாடமிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனை அடுத்து சக வீரர் ஒருவர் அவரை பைக்கில் அமர வைத்து மருந்து வாங்க கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பின்பக்கம் இருந்த சர்வேஸ் சரிந்து விழுந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாரடைப்பால் இளம் மல்யுத்த வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.