இன்றைய நவீன காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் செல்போனும், கையுமாகத்தான் இருக்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக அவர்கள் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தினாலும் சில தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களும் இருக்கின்றன. ஒரு சிலர் செல்போன் மூலமாக தவறான விஷயங்களை பார்ப்பதால் தற்போது பெண்களுக்கு எதிரான பல்வேறு பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மிட்டல் என்ற இளைஞர் ஒருவர் தன்னுடைய மணிபர்சில் ஆணுறைகளை வைத்திருந்துள்ளார்.
இதையடுத்து அவருடைய அம்மா மிட்டலின் துணிகளைத் துவைப்பதற்காக எடுத்துச் சென்றபோது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் ஆணுறை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த தாய் தன்னுடைய மகனான மிட்டலிடம் சென்று இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது தவறு என்று கடுமையாக திட்டியுள்ளார். மேலும் இதுபோன்ற சூழல் எப்போதும் வரக்கூடாது என்றும், தான் மிகவும் மனம் வருந்திய தாகவும் அந்த தாய் வேதனை தெரிவித்துள்ளார்.