Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… மனைவி கொடுத்த அதிர்ச்சி…. கணவனின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிகரை கிராமத்தில்  வீராச்சாமி -அன்னலட்சுமி  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தயாநிதி- வித்திஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அன்னலட்சுமிக்கு  அதே பகுதியில் வசிக்கும் சதீஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக  மாறியுள்ளது.

இதுக்குறித்து  வீராச்சாமி தனது மனைவியை  கண்டித்துள்ளார். இதனால்  அன்னலட்சுமி  சதீஷ்டன்   தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் அன்னலட்சுமி தனது  கள்ளகாதலருடன்   தாய் வீட்டிற்கு  வந்துள்ளார். இதனை அறிந்து  அங்கு சென்ற   வீராச்சாமி  மண்வெட்டியால் அன்னலட்சுமியை  சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அன்னலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்னலட்சுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீராச்சாமியை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |