இயங்குனர் இஸ்வரியாவின் முசாபிர் வீடியோ 4 மொழிகளில் நாளை ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவருக்கு காய்ச்சல் மற்றும் தலை சுற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே மருத்துவமனையில் இருந்து தனது வேலையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் முசாபிர் வீடியோ 4 மொழிகளில் நாளை ரிலீஸ் செய்யப்படும் என்று இன்று காலையில் அடுத்த அப்டேட் கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்ப்பவர்கள் மருத்துவமனையில் இருந்து செய்யும் வேலையா இது தயவுசெய்து ஓய்வெடுங்கள் ஐஸ்வர்யா. தலை சுற்றலுடன் வேலை செய்ய வேண்டாம் ப்ளீஸ் என்று அக்கறையுடன் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கீதாஞ்சலி செல்வராகவனும் விரைவில் குணமடையுமாறு தெரிவித்துள்ளார்.