Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! முதல் மனைவியின் கிட்னியை திருடி 2-வது திருமணம் செய்த கணவர்…. 4 வருடங்களுக்கு பிறகு தெரிந்த உண்மை…..!!!!

வங்கதேசத்திலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக வந்தவர் பிரசாந்த். இவர் கட்டமீத்தா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ரஞ்சிதா மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு பெரிய அதிர்ச்சியை காத்திருந்தது. அதாவது ரஞ்சிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு கிட்னி இல்லை என கூறியுள்ளனர். அப்போதுதான் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக தனக்கு நடந்த அறுவை சிகிச்சை ரஞ்சிதாவுக்கு ஞாபகம் வந்தது.

அதாவது பிரசாந்தின் கட்டாயத்தின் பேரில் தன்க்கு நடந்த ஆபரேஷனின் போது ஒரு கிட்னி திருடப்பட்டிருக்கலாம் என்று ரஞ்சிதா சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக ரஞ்சிதா பிரசாந்திடம் கேட்டபோது, தான் கிட்னியை திருடி விற்றதை பிரசாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தக் கிட்னியை விற்ற பணத்தில் பிரசாத் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார். இது தொடர்பாக ரஞ்சிதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரசாந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கணவனே மனைவியின் கிட்னியை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |