நடிகை யாஷிகா தன்னுடைய தோழி பவானி மற்றும் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்குள்ளாகி பவானி உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருக்கிறார். இந்நிலையில் அவருடைய காலில் பெரிய கட்டு போட்டு படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. மேலும் விபத்தால் ஏற்பட்ட காயத்திற்கு போடப்பட்ட தையல்களை எடுத்து யாஷிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவருடைய வயிற்றில் இருக்கும் தையல்கள் தெரிகிறது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வளவு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எப்படியெல்லாம் யாஷிகா வலியால் துடித்திருப்பார் என்று அவருடைய ரசிகர்கள் புலம்புகின்றனர். முன்னதாக தன்னுடைய உடல் நலம் குறித்து ட்விட்டரை பதிவு போட்ட யாஷிகா, இன்னும் ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு தன்னால் எழுந்து நடக்க முடியாது. படுத்த படுக்கையாக தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பவானி இறந்துதான் உயிர் வாழ்வது குற்ற உணர்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.