யூடியூப் வீடியோவை பார்த்து பி பார்ம் மாணவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது28). இவர் ஐதராபாத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய மஸ்தன் மற்றும் ஜீவா இன்னும் பி பார்ம் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் கூறியுள்ளார். இதற்காக ஸ்ரீகாந்த் சிகிச்சைக்காக மும்பை செல்ல விரும்பினார். ஆனால் அந்த மாணவர்கள் 2 பேரும் அவரை மலிவான விலையில் சிகிச்சை செய்யலாம் என சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் மூவரும் அறுவை சிகிச்சைக்காக தனியார் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இதில் இரண்டு மாணவர்களும் யூடியூபில் ஒரு வீடியோவை பார்த்து சிகிச்சையை செய்ய தொடங்கியுள்ளனர். சிகிச்சையின்போது துரதிஸ்டவசமாக ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டதன் காரணமாக ஸ்ரீ காந்த் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு ஸ்ரீ காந்த் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உடலை மீட்ட போலீசார் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதில் அதிக மயக்க மருந்து பயன்படுத்தியது மற்றும் அதிக இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே ஸ்ரீ காந்த் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.