ரஷ்ய படைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்த நிலையில் சரக்கு விமானம் ஒன்று ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள ஹோஸ்டோமல் என்ற விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பில் உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள வீடியோவில், உலகின் அதிக எடை கொண்ட Antonov-225 மிரியா சரக்கு விமானம், ரஷ்ய படைகள் வடமேற்கு புறநகர் பகுதியில் நடத்திய தாக்குதலில் சேதமடைந்துள்ளது பதிவாகியுள்ளது.