100 ரூபாயில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹர்(35). இவர் மும்பையில் உள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். அர்ஜூன் அவருடன் பணியாற்றும் மனோஜ் மரஜ்கோலிடம் (36) ரூபாய் 100 கடனாக பெற்று இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு அன்று குடி போதையில் இருந்திருக்கிறார்கள். அப்போது நூறு ரூபாயை திருப்பி தருவதாக தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாதவ் பவன் அருகே அர்ஜுன் தூங்கிக் கொண்டிருந்த போது சிமெண்ட் கட்டையால் அவரது மண்டை அடித்திருக்கிறார் மனோஜ் மரஜ்கோல். இதில் அர்ஜுன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து அந்த இடத்தைவிட்டு தப்பி ஓடிய மனோஜை அடுத்த இரண்டு மணி நேரத்தில் தீ.பீ சாலையில் போலீசார் கைது செய்துள்ளனர். 100 ரூபாயைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறு கொலை வழக்கில் முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.