பஞ்சாபில் வகுப்பறைக்குள் பேராசிரியர் ஒருவர் குடிபோதையில் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் பதாம் கோட்டில் குருநானக் தேவ் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். அதாவது ரவீந்தர் குமார் எனும் பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறைக்குள் வந்து மாணவர்கள் அருகே நின்று பாட்டிலில் இருந்த மதுவை அருந்தி கொண்டே நடனமாடியுள்ளார். அவர் ஒரு பஞ்சாபி திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோவில் பேராசிரியர் தனது சொந்த பணத்தில் மது அருந்துவதாகவும் தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/i/status/1572469161514913794
இவர் கணித பேராசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகின்றது. இந்த நிலையில் இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அவரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. ஆனால் ஆசிரியர் தான் குடிபோதையில் எதையும் செய்யவில்லை எனவும் வேடிக்கைக்காக செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.