சென்னை மதுரவாயல் பகுதியில் கிரிதரன் என்பவர் களரி பயிற்சி மையம் வைத்து நடத்தி வந்தார். தனியார் யூடியூப் சேனல் இவர் குறித்த செய்தியை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்காக நேற்று மாணவர்களுக்கு களரி வகுப்புகள் நடத்தினார். அப்போது திடீரென வாந்தி எடுத்த அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக கிரிதரன் தீவிரமாக உடற்பயிற்சிகளை செய்து வந்ததால் ரத்த ஓட்டம் வேகமாகி மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவரது உதவியாளர்கள் கூறியுள்ளனர்.