Categories
Uncategorized உலக செய்திகள்

அடக்கடவுளே….! வாட்ஸ்அப்பில் இந்த எமோஜி அனுப்பினால்…. 5 ஆண்டு சிறை தண்டனை… எச்சரிக்கும் அரசு..!!

வாட்ஸ்அப் செயலி மூலம் சிவப்பு நிற இதய குறியீட்டைக் குறிக்கும் எமோஜியை  அனுப்பினால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு நாடான சவுதியில் வாட்ஸ்அப் செயலி மூலம் சிவப்பு நிற இதய குறியீட்டைக் குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக புகார் வந்தால் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இதன்படி இத்தகைய ஆட்சேபனைக்குரிய குறியீடுகள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்து, அதன் பின் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

அதாவது அந்த புகார் மீது பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த குற்றத்துக்கு 1 லட்சம் சவுதி ரியால் அபராத தொகையுடன், சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடுவதாக சவுதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின்படி கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |