மத்திய பிரதேசத்தின் போபாலில் ஹபீப்கஞ்சில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்த சிறுமியை ஆசிரியர் ஒருவரிடம் நுழைவுத் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு வகுப்புக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர் வழக்கம்போல் பாடம் எடுக்கும் போது சிறுமியிடம் பெர்ட் என்ற வார்த்தையின் உச்சரிப்பை கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த சிறுமி சரியாக உச்சரிக்காததால் சிறுமியின் கையை முறுக்கி கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனால் வலி ஏற்பட்ட சிறுமி அலறியுள்ளார். இது குறித்து பெற்றோரிடம் கூறிய சிறுமியை உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சிறுமியின் எலும்பில் முறிவு ஏற்பட்டது என கூறியுள்ளார். மேலும் சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.