Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. வாலிபரை பாட்டிலால் குத்திய 2 பேர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

வாலிபரை சரமாரியாக தாக்கிய 2  பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பலவஞ்சிப்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு கே.செட்டிபாளையம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மகாராஜா, பிரவீன் குமார் என்ற 2  பேர் அவரிடம்  பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பாட்டிலை உடைத்து கார்த்திகேயனை சரமாரியாக குத்தியுள்ளனர்.

இதில் கார்த்திகேயன்  படுகாயம் அடைந்தார். மேலும் இது குறித்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகாராஜா, பிரவீன்குமார் ஆகிய 2  பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளுக்கு  7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |