Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. விஜே சித்ராவின் கணவர் இப்படி பட்டவரா?…. நெருங்கிய நண்பர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் 10 வருட நண்பர் இமானுவேல் சில அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார். அதாவது, “ஹேம்நாத் எங்களிடம் ஆற்காடு வீராசாமியின் பேரன் என்று தான் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது அவர் கூறியது பொய். வேறு ஒருவர் தான் ஆற்காடு வீராசாமியின் உண்மையான பேரன். அவரை நாங்கள் நேரிலும் சந்தித்தோம். ஹேம்நாத்துக்கு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, ரூம் போடுவது, வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றுவது இதுதான் வேலை. ஹேம்நாத்தை சித்ரா காதலித்த விஷயம் எனக்கு தெரியாது.

ஹேம்நாத் பல விஜேக்களை ஏமாற்றியுள்ளார். அவர் பல பெண்களுடன் ஒன்றாக இருந்த போட்டோக்கள் என்னிடம் இருக்கிறது. விஜேக்கள் அதிகமாக சம்பாதிப்பார்கள் என்ற காரணத்தினால் அவர்களை குறிவைத்து ஏமாற்றி பழகியிருக்கிறார். ஹேம்நாத் ஜெயிலுக்கு செல்வதற்கு முன்னதாக நான்தான் அவர் வைத்திருந்த பொருட்களை எடுத்து வைத்தேன். அப்போது பெரிய பெரிய பாக்ஸ்களில் போதை மாத்திரைகள், காண்டம்ஸ், ப்ரிட்ஜில் பீர் பாட்டில்கள் இருந்தது. அந்த சூழ்நிலையிலும் கூட தன்னிடம் பீர் பாட்டில் எல்லாம் பத்திரமாக வை என்று ஹேம்நாத் கூறினார்” என இமானுவேல் கூறியுள்ளார்.

Categories

Tech |