வீட்டின் சுவர் மீது பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் நேற்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக விருதாச்சலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து நேருக்கு நேர் மோத வந்துள்ளது. இதனை பார்த்த மறறொரு பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரம் உள்ள மனோகரன் என்பவரது வீட்டின் சுவர் மீது மோதியுள்ளார்.
இதில் பேருந்தும், வீட்டின் சுவரும் சேதம் அடைந்தது. மேலும் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் வீரமுரசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.