ஸ்காட்லாந்தில் வீட்டு கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்ததால் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நியூ டவுன் பகுதியில் மிராண்டா டிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2019 ஆம் வருடம் தனது பெற்றோரிடம் இருந்து ஒரு வீட்டை வாங்கி அதை இரண்டு வருடங்களாக புதுப்பித்து இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த வருடம் அந்த வீட்டின் முன் பக்க கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்துள்ளார். இதன்பின் சமூக ஊடகங்களின் பயன்பாட்டர்களிடையே அந்த கதவு பிரபலம் அடைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலரும் அந்த வழியே தெருவில் செல்லும்போது அவரது வீட்டின் முன் வந்து கதவு முன்னால் நின்று கொண்டு புகைப்படம் எடுப்பது வழக்கமாகி இருக்கிறது.
இதற்கு சோதனையாக அவருக்கு அரசிடம் இருந்து புதிய நெருக்கடி ஒன்று வந்துள்ளது. அதில் இந்த பிங்க் நிறத்திற்கு எடின்பர்க் நகராட்சி கவுன்சில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன் அதனை வெள்ளை நிறத்திற்கு மாற்றும்படி வலியுறுத்தி இருக்கின்றனர். அப்படி மாற்றவில்லை என்றால் 20,000 பவுண்டுகள் அபராதம் கட்ட நேரிடும் என டிக்ஸ்சனுக்கு நகராட்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த நிலையில் அதற்கு டிக்சன் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிஸ்டல் நாட்டில் மற்றும் ஹர்ரோகேட் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் பளிச்சென்று நிறத்தில் பெயிண்டிங் அடிக்கப்பட்டு காணப்படுகிறது.
ஆனால் நான் எனது வீட்டிற்கு வரும்போது என்னுடைய முன் பக்க கதவை பார்க்கும்போது அது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த கதவு விவகாரத்தில் வந்த புகார் ஆனது முற்றிலும் தீய நோக்கம் கொண்டது. இது மிகவும் சிறிய விஷயம் என தெரிவித்துள்ளார் இருப்பினும் எடின்பர்க் நகராட்சி கவுன்சில் விதிகளின்படி வீட்டின் முன்பக்க கதவுகள் மங்கலான நிறத்தில் இருக்க வேண்டும் என கூறியுள்ளது. இதனை தொடர்ந்து அடர் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்க்ஷன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.