தமிழகம் முழுவதும் இன்று (பிப்.19) காலை 7 மணி அளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் குறைந்த அளவிலேயே பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சென்னையில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
குறிப்பாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்கு சாவடியில் வாக்களிக்க மக்கள் வராத காரணத்தினால் வெறிச்சோடி காணப்படும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் (3.9%) குறைந்த அளவு வாக்கு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.